மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை அறிவிப்பு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்

 


           மூன்று மாதம் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய  காலத்திற்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


தமிழகத்தில் கொரோனா 2வது அலை காலத்தில் பணியாற்றி வரும் மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி ஏப்ரல், மே, ஜூன் மாத காலத்திற்கு மருத்துவர்களுக்கு ரூ.30,000, செவிலியர்களுக்கு ரூ.20,000, இதர பணியாளர்களுக்கு ரூ.15,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


 கொரோனா சிகிச்சை பணியின்போது உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படும் என்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு தலா ரூ.20,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


              நிருபர், பாஸ்கர்