திருநங்கைகளுக்கு உதவி பணம் மத்திய அரசு


  திருநங்கைகளுக்கு இந்தியாவில் மத்திய அரசும் சரி, மாநில அரசுகளும் சரி திருநங்கைகளுக்கு என சமூகத்தில் ஒரு அங்கீகாரம் அளித்து வருகிறது. அரசின்  துறைகளிலும் இவர்கள் கால்பதித்து வருகின்றனர்.


மேலும், கொரோனா காரணமாக நாடு முழுவதும் உள்ள திருநங்கைகளின்  தேவைகளை  பூர்த்தி செய்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், நலிவடைந்துள்ள திருநங்கைளுக்கு உதவ வேண்டும் என பல அமைப்புகளும், தன்னார்வலர்களும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.


அதனடிப்படையில்  மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகம், திருநங்கைகளின் அடிப்படை தேவைகளுக்கு உதவியாக 1,500 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளது


 இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விரும்பும் திருநங்கைகள் அல்லது அவர்கள் சார்ந்திருக்கும் சமுதாய அமைப்புகள், அரசின் http://forms.gle/H3BcREPCy3nG6TpH7 என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 


இணையதளத்தை திறக்கையில், ஒரு விண்ணப்ப படிவம் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் ஆதார் எண், வங்கி கணக்கு எண் போன்ற அடிப்படை விவரங்களை பதிவு செய்து இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


                   நிருபர். பாலாஜி