ஒரு வரிச் செய்திகள்

 

          

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்தால் மட்டுமே இந்தியாவிடமிருந்து சர்க்கரை மற்றும் பருத்தி இறக்குமதி செய்யப்படும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.



நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு 37 கிலோ மீட்டர் வேகத்தில் சாலை கட்டுமானப் பணிகள் நடப்பது உலக சாதனை என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர; நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.


வழக்கமான ரயில் சேவை அடுத்த 2 மாதங்களில் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


கொடைக்கானல் ரோடுக்கு பதிலாக தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.


ரஷ்ய வெளியுறவுத் துறை மந்திரி செர்கே லாவ்ரோவ் வரும் திங்கட்கிழமை இந்தியாவுக்கு வருகை தருகிறார்.


இறுதி நாளில் இலங்கை அணி 348 ரன்கள் எடுத்து வெஸ்ட் இண்டீசுடனான டெஸ்ட் தொடரை கைப்பற்றுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையை மாற்ற வேண்டும் என்றும், மியான்மர் அகதிகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் மிசோரம் முதலமைச்சர் சோரம்தங்கா கேட்டுக் கொண்டுள்ளார். 


ஆதாருக்காக பதிவு செய்யப்பட்ட புதுச்சேரி வாக்காளர்களின் செல்போன் எண்கள் எப்படி வெளியானது? என்பது குறித்து விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய ஆதார் ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

 

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் கால்இறுதியில் ரஷிய வீரர் மெட்விடேவ், ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா ஆகியோர் அதிர்ச்சி தோல்வி கண்டனர்.


டெல்லியிலிருந்து சீனாவுக்கு கடத்த முயன்ற 5 கோடி ரூபாய் மதிப்புள்ள மயில் இறகுகளை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


தமிழகத்தில் 26 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 30 ரூபாய் வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.



அமெரிக்காவின் உள்கட்டமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு வசதிகளை மேம்படுத்த அதிபர் ஜோ பைடன் புதிய திட்டத்தை அறிவித்துள்ளார்.


ஆமதாபாத்-மும்பை தேஜஸ் ரெயில் சேவை ஒரு மாத காலத்திற்கு தற்காலிக ரத்து செய்யப்படுகிறது.


அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணை வேந்தரை தேர்வு செய்ய குழு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.