திண்டுக்கல்லில் குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது

 


           திண்டுக்கல்லில் குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது


திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அனைத்து மகளிர் காவல்துறையினரால் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு திண்டுக்கல் மாவட்ட சிறையில் இருக்கும் சிலுவத்தூர் வழி ராஜக்காபட்டி அருகே உள்ள R.கல்லுப்பட்டி யை சேர்ந்த பெருமாள்(58), தங்கவேல்(38), குருநாதன்(60) ஆகிய 3 பேரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியா பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டதைத் தொடர்ந்து காவல்துறையினர் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்