தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா- பொதுமுடக்கம் நீட்டிப்பு

 


தமிழகத்தில், மார்ச் 31-ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

கடந்த ஒரு ஆண்டு காலமாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்தது. 

இதனையடுத்து, இதற்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணிகளில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியது. தற்போது, தடுப்பு மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில், பல இடங்களில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தற்போது பல இடங்களில் உருமாறிய கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது.

                        


                        

இதனையடுத்து, அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் காரணமாக, தமிழகத்தில், மார்ச் 31-ம் தேதி வரை மருத்துவர்கள் மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக  தமிழக அரசு அறிவித்துள்ளது.