சுவையான சேமியா பிரியாணி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்...
அசத்தலான சேமியா பிரியாணி ரெசிபி.
தேவையான பொருட்கள்
சேமியா - 1 கப் (வறுத்துக் கொள்ளவும்),
நெய் - 3 டீஸ்பூன்,
பிரியாணி இலை - 2,
பட்டை - 1,
கிராம்பு - 2,
வெங்காயம் - 1,
தக்காளி - 1,
பீன்ஸ் - 5,
கேரட் - 1,
பட்டாணி - 1/4 கப்,
இஞ்சி,
பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2,
முந்திரி - 10,
உப்பு - தேவைக்கு,
முட்டை - 1.(optional)
செய்முறை
முதலில், வாணலியை அடுப்பில் வைத்து என்னைவிட்டு சூடானதும், பிரியாணி இல்லை, பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து வதக்கவும். பிறகு, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
தக்காளி சேர்க்கவும். தக்காளி வெந்ததும் பொடியாக நறுக்கிய பீன்ஸ், கேரட்டுடன் பச்சை பட்டாணி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
காய் பாதி வெந்ததும், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.
பிறகு, ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும், சேமியா சேர்த்து வேகவிடவும்.
சேமியா பாதி வெந்ததும் முட்டை உடைத்து ஊற்றி நன்றாக கிளறி வேகவிடவும்..(Optional)
கமகமக்கும் சேமியா பிரியாணி தயார்.
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் சமையல் பயணம் தொடரும்.
வணக்கம் அன்புடன் கார்த்திகா