வேட்பாளர் பட்டியலை வெளியிடும் திமுக

 



திமுக இன்று வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளது. தேர்தல் அறிக்கையை திமுக நாளை வெளியிட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ஏப்.6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழக ராசியல் காலம் சற்று பரபரப்பாக தான் காணப்படுகிறது. இந்நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம் என தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திமுக இன்று வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளது. மேலும், அரசியல் பிரபலங்கள் மற்றும் பொது மக்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில், தேர்தல் அறிக்கையை திமுக நாளை வெளியிட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.