தமிழகத்தில் நெருங்கும் கொரோனா பாதிப்பு

 


தமிழகத்தில் மேலும் 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,63,363 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தற்பொழுது கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. அந்தவகையில், நீண்ட நாட்களுக்கு பின்  கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1000-ஐ நெருங்கவுள்ளது. 

ஒரே நாளில் 71,835 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டத்தில், 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக 8,63,363 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 394 பேருக்கு தொற்று உறுதியானது. மேலும், 569 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 8,44,568 ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா பாதிப்பால் இன்று 9 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,573 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, மருத்துவமனையில் 6,222 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.