ஊழல் படிந்த கரங்களை உயர்த்திப் பிடிப்பதா – திமுக தலைவர் ஸ்டாலின்

 


ஊழல் படிந்த இரு கரங்களை பிரதமர் மோடி உயர்த்தி பிடித்துள்ளார் என்று முக ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் விமர்சித்துள்ளார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் சென்னை மெட்ரோ சேவை உட்பட பலத் திட்டங்களை தொடங்கி வைக்க சென்னை வந்த பிரதமர் மோடி, விழா நிறைவில் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை அழைத்து இருவரின் கைகளை உயர்த்தி பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் பிரதமர் மோடி.

இந்நிலையில், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பரப்புரையில் பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின், ஊழல் படிந்த இரு கரங்களை பிரதமர் மோடி உயர்த்தி பிடித்துள்ளார் என்று விமர்சித்த ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஊழல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.