பசிக்கின்றதா.. எடுத்துக்கோங்க-இலவச குஸ்கா கொடுக்கும் பெண்

 

பசிக்கின்றதா.. எடுத்துக்கோங்க!’- ஆதரவற்றவர்களுக்கு இலவச ’குஸ்கா' கொடுக்கும் பெண்!

 

கோவையில் ஏழை மற்றும் ஆதரவற்றவர்களுக்கு பசியை போக்கும் வகையில் இலவசமாகவும், மற்றவர்களுக்கு 20 ரூபாய்க்கும் கறி இல்லாத பிரியாணியை இளம்பெண் ஒருவர் வழங்கி வருகிறார். 

புளியகுளம் பகுதியில் சப்ரினா என்ற பட்டதாரி சாலையோரம் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். 

இவரது கடை முன்பாக வைக்கப்பட்டுள்ள பெட்டி ஒன்றில் குஸ்கா பொட்டலங்களை வைத்து, "பசிக்கின்றதா. எடுத்துக்கோங்க" என்று எழுதி வைத்துள்ளார். பெட்டியில் வைக்கப்பட்டுள்ள பார்சல்களை ஆதரவற்ற ஏழைகள் இலவசமாக எடுத்துச் செல்கின்றனர். 

இது குறித்து சப்ரினாவிடம் கேட்டதற்கு, 20 ரூபாய்க்கு சாதாரண பிரியாணி விற்பனை செய்வதால் நட்டம் ஏதுமில்லை என்றும் ஆதரவற்றவர்களுக்கு இலவசமாக கறி இல்லாத பிரியாணி வழங்க, உதவும் மனம் இருந்தால் போதும் எனவும் தெரிவித்துள்ளார்.