இன்று ஒரு ஆன்மிக தகவல்

 


மகத்தான வாழ்வை தரும் மாசிமகம்... விரதம் இருப்பது எப்படி?

🌟 மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்கிறார். மாசிமாதத்தில் ஆறு, குளம், கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் அமிர்தம் இருப்பாதாகக் கருதப்படுவதால் ஆறு குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடுகின்றனர். மாசி மகத்தில் புனித நீராடுவதன் மூலம் தங்களின் பாவங்கள் நீங்கும் என்பதால் கடல், ஆறு, நதி உள்ளிட்ட நீர்நிலைகளில் மக்கள் நீராடி இறைவனை வழிபடுகின்றனர்.

🌟 மனிதர்கள் இறைவனை வேண்டுவதற்காக ஏற்படுத்தப் பட்டவையே விரதங்கள். பல்வேறு விரதங்கள் கடைபிடிக்கப்பட்டு வந்தாலும், மாசி மாதத்தில் மகம் நட்சத்திரத்தில் இருக்கும் விரதம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

அந்நாளில் விரதம் மேற்கொள்வது எப்படி? என்பதைப் பற்றி பார்க்கலாம்.

🌟 'மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம்" என்பது நம் முன்னோர் வாக்கு. 

🌟ஒவ்வொரு மாதமும் மகம் நட்சத்திரம் வந்தாலும், மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரத்தை 'மாசி மகம்" என்று சிறப்பித்துக் கூறுவது வழக்கம்.

🌟 மாசி மக நாளை, 'கடலாடும் நாள்" என்றும், 'தீர்த்தமாடும் நாள்" என்றும் அழைப்பார்கள். 

🌟இந்நாளில் விரதம் இருந்து குல தெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பல விதமான தானங்கள் செய்வது சிறப்பான பலனைத் தரும்.

🌟மக நட்சத்திரத்திற்கு அதிபதியான கேது பகவான் ஞானத்தையும், மோட்சத்தையும் அருளக்கூடியவர். கோடீஸ்வர யோகத்தையும் வழங்கக்கூடிய வல்லமை உள்ளவர். 

🌟மாசி மகத்தில் கேதுவின் நட்சத்திரமான மக நட்சத்திரத்தில் சந்திரன் வருகிறது. அப்போது சிம்ம ராசி நாதன் சூரியன். கும்பராசியில் இருந்து சந்திரனை பார்க்கும் காலம் மாசிமாத மக நட்சத்திரத்துடன் இணைவதே மாசி மகமாக திகழ்கிறது.

விரத முறைகள் :

🌟 மாசிமகத்தில் விரதமிருப்பவர்கள் காலையில் எழுந்து ஆறு, கடல், குளம் போன்ற புண்ணிய தீர்த்தங்களில் நீராட வேண்டும்.

🌟 பிறகு உலர்ந்த ஆடைகளை அணிந்து கொண்டு சிவ சிந்தனையுடன், சிவன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும்.

🌟 தேவார, திருவாசக பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும்.

🌟 முழுநேரமும் விரதம் இருக்க முடியாதவர்கள் மதியம் ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிட்டுவிட்டு, இரவு பால், பழத்தை சாப்பிடலாம்.

🌟 அன்றைய தினம் முழுவதும் வேறு எந்த பணிகளிலும் ஈடுபடாமல், இறைவனை மனதில் நினைத்து ஒரே சிந்தனையோடு இருக்க வேண்டும். 

பலன்கள் :

🌟 மாசிமகத்தன்று குழந்தையில்லாத தம்பதிகள் விரதமிருந்து அன்னதானம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

🌟 மாசிமக நாளில் புனித நீராடி இறைவனை வணங்கினால் சகல தோஷங்களும் நீங்கும். மேலும் குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும்.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 

ஓம் நமசிவாய

மோகனா செல்வராஜ்