சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் செயல்படும் உணவகத்தை காவல் ஆணையாளர் இன்று (19.02.2021) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
*******************
*சென்னையில், ரூ.5ஆயிரம் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ கைது.*
*சென்னை, குரோம்பேட்டையில், மது போதையில் பைக்கில் வந்த ஏழுமலை என்பவரிடம், ரூ.5ஆயிரம் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் கிருஷ்ணகுமார் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
*****************
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
11,813 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் கடந்த டிசம்பரில் தேர்வு நடத்தியது.
தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சம் பேர் எழுதிய தேர்வில் 1:5 என்ற முறையில் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
காவலர் தேர்வில் பங்கேற்றவர்களின் பதிவெண்கள் www.tnusrbonline.org - இல் வெளியிடப்பட்டுள்ளது.
*****************
*கரூரில் மகப்பேறு நிதி உதவி பெற கர்ப்பிணியிடம் ரூ.2,000 லஞ்சம் வாங்கிய திண்டுக்கல் நர்ஸ் கைது*
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை சேர்ந்த பழனியம்மாள் என்பவர் கரூரில் துணை சுகாதார நிலையத்தில் கிராம சுகாதார நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவர் கர்ப்பிணியான இளமதி என்பவரிடம் மகப்பேறு நிதி உதவி பெறுவதற்கு ரூ 2,000 லஞ்சம் வாங்கியதாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
****************