குறுக்கு வழியில் ஆட்சி அமைக்காது- புதுச்சேரி பாஜக தலைவர்

பாஜக ஒருபோதும் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க முயலாது என பாஜக தலைவர் சாமிநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்தது. 

சட்ட பேரவையில் முதல்வர் நாராயணசாமி கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வியடைந்ததாகவும் சபாநாயகர் தெரிவித்த நிலையில், முதல்வர் நாராயணசாமி தன் பதவியை ராஜினாமா செய்தார்.

                                     


இந்நிலையில், புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், பாஜக ஒருபோதும் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க முயலாது  என்றும்,  தேர்தல் வரும் வரை நாங்கள் புதிய ஆட்சியை அமைக்க ஆளுநரிடம் கோர மாட்டோம்.’ என்றும் தெரிவித்துள்ளார்.