அரசு ஊழியர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் கைவிடுவதாக முதல்வர் அறிவித்திருந்த நிலையில், தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது.
2019-ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான நிலுவையில் உள்ள வழக்கை வாபஸ் பெறுவதாக முதல்வர் பழனிசாமி சென்ற வாரத்தில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், 2019-ம் ஆண்டு ஜனவரி 22 முதல் 30-ம் தேதி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட குற்றவியல் வழக்குகள் உள்ளிட்ட அனைத்தும் வழக்குகளும் ரத்து செய்து தமிழக அரசு அரசானை வெளியிட்டுள்ளது.
**********************
விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி தள்ளுபடி கடனை செய்த ஒரே அரசு அதிமுக அரசு.வாக்குறுதி கொடுத்தால் நிறைவேறும் என்று முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார்.
***********************
கொரோனா காலத்தில் தமிழக முதல்வர் நிவாரணம் வழங்கியதுடன் மாணவர்களுக்கு என்ன வேண்டும் என யோசித்தது முதல்வர் தான். மேலும் ஒரு ஆண்டு பள்ளி இயங்காததால் மாணவர்களின் கல்வி ஆண்டு வீணாகிவிடும் என்று அனைவரையும் ஆல்பாஸ் செய்தவரும் முதல்வர் என்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் நிகழ்ச்சியை துவங்கி வைத்து அதன் பின் செய்தியாளர்களிடம் பேசினார்
*******************
முதல்வர் பரப்புரை சென்ற சென்னை- அரக்கோணம் சாலையில் உள்ள பேர்ணாம்பட்டு பகுதியில் துப்பாக்கி, வெடிகுண்டு உடன் இருந்தவர் கைது செய்யப்பட்டார். சந்தேகத்துக்கு இடமாக ஆயுதங்கள் பலநம்பர் ப்ளேட்களுடன் சுற்றியவரை பேர்ணாம்பட்டு காவல்த்துறை கைது செய்தனர்.
************************