வேளாண் சட்டங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்- எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

 



சர்ச்சைக்குரிய 3 புதிய வேளாண் சட்டங்களையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டுமென அனைத்துக் கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினர். 

இதைத் தொடர்ந்து வேளாண் சட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் மீண்டும் விவாதிக்கலாம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் 29.01.2021 தொடங்கியது. 

ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஜனாதிபதி உரையுடன் கூட்டம் தொடங்கியது. 

இதில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யக் கோரி ஜனாதிபதி உரையை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 20 எதிர்க் கட்சிகள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்தன. 

இதன் காரணமாக 01.02.2021 காலை 11 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. 

01.02.2021 காலை 11 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2021ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.