தேர்தல் ஆணைய உத்தரவை மதித்து மக்கள் வரிப்பணத்தில் விளம்பரங்கள் - தமிழக அரசு -ஆர். எஸ். பாரதி

 


தேர்தல் ஆணைய உத்தரவை மதித்து மக்கள் வரிப்பணத்தில் விளம்பரங்கள் வெளியிடுவதை தமிழக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்: ஆர். எஸ். பாரதி எம்.பி வலியுறுத்தல்

தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் சட்டவிரோதமாக பொங்கல் பரிசுக்கான டோக்கன்களை தொடர்ந்து வினியோகித்து வந்த நிலையில், கழகத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்த வழக்கில் கழகத்தின் சட்ட திட்டத் திருத்தக்குழு செயலாளரும் மூத்த வழக்கறிஞருமான திரு.பி. வில்சன் எம்பி அவர்கள் ஆஜராகி வாதாடினார்.

மக்கள் பணத்தை பயன்படுத்தி விளம்பரப் படுத்தக் கூடாது என்றும்; அவ்வாறு விளம்பரப்படுத்தினால் அந்த அரசியல் கட்சி மீது, அரசியல் கட்சியின் சின்னங்களுக்கான விதிமுறைகளின் கீழ் அந்த அரசியல் கட்சியின் தேர்தல் சின்னத்தை முடக்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தேர்தல் ஆணையம் விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையம் 7.10.2016ஆம் தேதி அன்று அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு விதிமுறைகளை வகுத்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளது என்று தனது வாதத்தில் குறிப்பிட்டு அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாதிட்டார்.