சென்னை வியாசர்பாடி அருகே சமூக பொருளாதார கல்வி புனர்வாழ்வு சங்கம் என்ற பெயரில் தனியார் காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு.
சென்னை வியாசர்பாடி அருகே சமூக பொருளாதார கல்வி புனர்வாழ்வு சங்கம் என்ற பெயரில் தனியார் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தின் இயக்குனராக கல்யாண சுந்தரம் என்பவர் உள்ளார். சுமார் 18 -க்கும் மேற்பட்ட சிறுமிகள் இந்த காப்பகத்தில் உள்ளனர்.
இந்நிலையில், குழந்தைகளுக்கான ஹெல்ப்லைன் 1098 க்கு தொலைபேசி எண்ணுக்கு கடந்த 24 ஆம் தேதி இரவு ஒரு சிறுமி அழைப்பு விடுத்துள்ளார். சிறுமி கூறுகையில், காப்பகத்தில் பாலியல் தொந்தரவு அளிக்கப்படுவதாக புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு, குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் சேர்ந்தவர்கள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரிவு துணை கமிஷனரின் தனிப்படை போலீசா சென்று, அந்த காப்பகத்தில் இருந்து 18 சிறுமிகளை மீட்டுள்ளநர்.
மீட்கப்பட்ட சிறுமிகளை சேத்துப்பட்டில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றில் தங்க வைத்துள்ள நிலையில், அவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.