ரஜினிகாந்த் கூறியதில் இருந்து கிளற வேண்டாம் – கமல்ஹாசன் கருத்து

 


உங்களுக்கு விவரம் வேண்டும் என்பதற்காக எதையாவது சொல்ல முடியாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்வைத்து, புதிய கட்சி ஒன்றைத் துவங்கி அரசியலில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்துவந்த ரஜனிகாந்த், சில நாட்களுக்கு முன்பாக அந்த முடிவிலிருந்து பின்வாங்கினார். தன்னுடைய உடல்நிலையின் காரணமாக தான் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என அறிக்கை ஒன்றின் மூலமாக ரஜினிகாந்த் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.இதன் விளைவாக தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கையில்,நான் ஏன் இப்பொழுது அரசியலுக்கு வர முடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளேன்.

நான் என் முடிவை கூறிவிட்டேன். தயவு கூர்ந்து இதற்கு பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டுமென்று யாரும் இது போன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்குஉள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இது குறித்து கூறுகையில், அது ரஜினியின் அறிக்கை.அதற்கு நாம் எப்படி பதில் சொல்ல முடியும்.உங்களுக்கு விவரம் வேண்டும் என்பதற்காக எதையாவது சொல்ல முடியாது.ரஜினியின் ஆரோக்கியம் மிக முக்கியம்.ரஜினிகாந்த் கூறியதில்  இருந்து சும்மா கிளறிக் கொண்டிருக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.