முக்கியச் செய்திகள்

 


21 மிக்-29 ரக போர் விமானங்களையும், 12 சுகோய் சு-30 எம்கேஐ ரக போர் விமானங்களையும் ரஷ்யாவிடமிருந்து புதியதாக வாங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

**************************

குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் வருகின்ற ஜனவரி 20, 22, 24, 26 ஆகிய தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

***********************************

தமிழகத்தில் வருகின்ற 20, 21 ஆகிய தேதிகளில் தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

******************************

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் மசூதி கட்டும் பணி தொடங்குவதன் அடையாளமாக குடியரசு நாளில் தேசியக்கொடி ஏற்றவும், மரக்கன்றுகள் நடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

*****************************

குஜராத்தின் அகமதாபாத் மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டம் மற்றும் சூரத் மெட்ரோ ரயில் திட்டம் ஆகியவற்றிற்கு பிரதமர் மோடி இன்று காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

******************************

நிலம் கையகப்படுத்துவது தொடர்பான விவகாரத்தில் விவசாய இடங்களில் நுழையவோ அல்லது பயிர்களை அப்புறப்படுத்தவோ கூடாது என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

*******************************

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு அடுத்த மாதம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். 

***************************

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் 12 ஆண்டுகளுக்கு பின் முழுக்கொள்ளளவான 71 அடி வரை நீர் தேக்கப்பட்டுள்ளது.