புதிய பாராளுமன்றம் கட்ட உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

 
*புதிய நாடாளுமன்ற கட்டிடம் உள்ளிட்ட சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல்.

'சென்ட்ரல் விஸ்டா' திட்டத்தின் கீழ் புதிய பாராளுமன்ற கட்டிடம், மத்திய தலைமைச் செயலகம் ஆகியவை கட்டப்பட உள்ளன. புதிய பாராளுமன்ற கட்டிடம் இப்போதுள்ள கட்டிடத்தின் அருகே அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள கட்டிடம் வட்ட வடிவில் அமைந்துள்ளது. ஆனால் புதிய கட்டிடம் முக்கோண வடிவில் அமைக்கப்படவுள்ளது. 


இந்நிலையில் மத்திய அரசின் விஸ்டா திட்டத்துக்கு எதிராக பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இந்த மனுக்கள்  விசாரணைக்கு வந்தன. அப்போது,  டெல்லியில் புதிய பாராளுமன்றம் கட்டுவதற்கான மத்திய அரசின் சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்கு எந்தவிதமான தடையும் இல்லை எனவும் அடிக்கல் நாட்டுவதற்கும் தடை இல்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

                நாடாளுமன்றம் புதிய கட்டிடம் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி

நாடாளுமன்றம் புதிய கட்டிடம் கட்டும் பணிகளுக்கு அனுமதி அளித்தது உச்ச நீதிமன்றம் நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம்.         நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை துவங்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது உச்சநீதிமன்றம்.

நாடாளுமன்றம் புதிய கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசு அனைத்து கட்டிடம்  அனுமதியும் பெற்று உள்ளது உச்சநீதிமன்றம்.