திருவள்ளூர் – சென்னை திமுக மக்கள் கிராம சபை

 


திருவள்ளூர் – சென்னை ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் திமுக மக்கள் கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

2021 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் வெகு விரைவில் நெருங்கிவரும் நிலையில், தற்போது அரசியல் கட்சிகள் தங்களுக்கான தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டன.திமுக சார்பில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் திமுக மக்கள் கிராம சபை கூட்டம் நடை பெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று திருவள்ளூர் – சென்னை ஆகிய மாவட்டங்களில்  திமுக மக்கள் கிராம சபை கூட்டம்  நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் மு.க.ஸ்டாலின் பொதுமக்களை சந்தித்து பேச உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.