தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

 


தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்துவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும், அது தொடர்பாக எவ்வித பரிந்துரையும் செய்யவில்லை என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கமளித்துள்ளார்.

மேலும்,கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் உயர்மட்டக் குழுவில் அனைத்து கட்சியினரும் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர் என தெரிவித்தனர்.