தடுப்பூசி போட்டுக் கொள்ள மாட்டேன்: பாஜக முதல்வர் திடீர் அறிவிப்பு

 


இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அளித்த அனுமதியை தொடர்ந்து கோவாக்சின்  மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளன. 

பிரதமர் மோடி, ‘இந்தியா தயாரித்த இரண்டு தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளித்து இருப்பது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும்.  இது உள்நாட்டு தயாரிப்பு கனவை நிறைவேற்றி உள்ளது. இந்திய விஞ்ஞான சமூகத்தின் திறனை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது’ என்று தெரிவித்தார்.

இந்நிலையில், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், தான் முதலில் தடுப்பூசியை போட்டுக் கொள்ளமாட்டேன் என்று அறிவித்துள்ளார். 

பட்டியலிடப்பட்ட முன்னுரிமை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படும். அதுவரை நான் காத்திருப்பேன்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  சிவராஜ் சிங் சவுகான், சில வாரங்கள் கழித்து தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார். 

இவர் தற்போது தான் முதலில் தடுப்பூசியை போட்டுக் கொள்ளமாட்டேன் என்று கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக  பேசப்படுகிறது.