துபாய் இளவரசருடன் சைக்கிள் ரேஸில் கலந்து கொண்ட நெருப்பு கோழி

 


துபாய் பட்டத்து இளவரசர் சைக்கிள் சாலையில் தனது குழுவினருடன் சைக்கிள் பயணம் மேற்கொண்டபோது, திடீரென இரண்டு நெருப்புக் கோழிகள் அவரது சைக்கிள் பாதைக்கு இணையாக ஓடியுள்ளன.

துபாயில் அல் மர்மும் என்ற ஒரு இயற்கை வனப்பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட காடுகள் மற்றும் பாலைவன ஈரநிலங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. 

இங்குள்ள அல் குத்ரா ஏரி மிகவும் பிரபலமான ஒன்றாகும். இப்பகுதி சைக்கிள் பாதை, நடைபாதை, புகைப்படங்கள் எடுக்க வடிவமைப்புகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பகுதியாகும்.

பலரும், அடிக்கடி இந்தப் பாதைகளில் சைக்கிள் பயணம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 

இதனையடுத்து துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ராஷித் அல் மக்தூம் ஆகியோர் அடிக்கடி இப்பகுதியில், சைக்கிளில் பயணம்  மேற்கொள்வதுண்டு.

அவர் சமீபத்தில் சைக்கிள் சாலையில் தனது குழுவினருடன் சைக்கிள் பயணம் மேற்கொண்டபோது, திடீரென இரண்டு நெருப்புக் கோழிகள் அவரது சைக்கிள் பாதைக்கு இணையாக ஓடியுள்ளன. 

இந்த காட்சியை அவர் தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி  வருகிற நிலையில், இதில் பலர் நெருப்புக்கோழி உடன் பந்தயம் நடைபெற்றது போல இருப்பதாக கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.