செய்திகள்

 

பள்ளிகள் திறப்பு – பாடத்திட்டம் குறைப்பு:

கொரோனா தொற்று அச்சம் காரணமாக கடந்த வருடம் மார்ச் 25ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன.  தமிழகத்திலும் கடந்த டிசம்பர் மாத மத்தியில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

அதன்படி 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கியமான பாடங்களை தவிர்த்து 40% பாடத்திட்டம் குறைக்கப்பட்டு உள்ளது. அதற்கான விபரங்களை பள்ளிக்கல்வி இயக்குனரகம் வெளியிட்டு உள்ளது. 

***************************

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால், ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம்.

************************

மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறை செலுத்தியவர் கருணாநிதி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தருமபுரி மாவட்டம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட தூள்செட்டி ஏரி கிராம சபை கூட்டத்தில் பேசினார். 

தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவிரி நீர் வராத இடங்களுக்கும் ஒகேனக்கல் கூட்டு குடி நீர் கொண்டு சேர்க்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மக்களின் சுய உதவி குழு திட்டத்தை கொண்டு வந்தவர் கலைஞர் தான் என கூறினார்.

பின்தங்கிய பகுதிகளின் வளர்ச்சிக்கு திமுக உறுதுணையாக இருக்கும் என கூறினார்.  திமுக ஆட்சிக்கு வந்ததும் ஒகேனக்கல் குடிநீர் திட்டம் சீரமைக்கப்படும் என ஸ்டாலின் கூறினார்.

***************************