கொரோனா நெறிமுறையை மீறி இரவு விருந்து

 


கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் 200 பேர் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி இரவு விருந்தில் பங்கேற்று, கொரோனா நெறிமுறையை மீறியாக  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்தில் உள்ள போஜியூர் கடற்கரையில் கிறிஸ்துமஸ் தினத்தன்று  நடைபெற்ற விருந்து முறையான அனுமதி இல்லாமல் நடைபெற்றதாக கூறப்படுகிறது.இதன்  வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

ஆனால் இது தொடர்பாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவலில், “எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை  என்றும்  இரவு 7 மணி முதல் அதிகாலை 1 மணி வரை இந்த விருந்து நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கேரள தொற்று நோய்  ஒழுங்குமுறையின் கீழ் விருந்தின் அமைப்பாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் மாவட்டத்தில் பிரபலமான சுற்றுலாத் தலமாக போஜியூர் கடற்கரை விளங்குகிறது.விருந்தில் ஏதேனும் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டதா என போலீசார் விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.