நிவர் புயல் பாதிப்புகளை சீரமைக்க நிதி

 நிவர் புயல் பாதிப்புகளை சீரமைக்க ரூ.74.24 கோடி நிதி

நிவர் புயலால் கடலூர், விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டது. நிவர் புயல் பாதிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டு வந்தார்.

நேற்று கடலூர் மாவட்டத்திற்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நீரில் மூழ்கிய பயிர்களை வாங்கி பார்த்து ஆய்வு செய்தார். மேலும் நிவர் புயல் சேதம் குறித்த அறிக்கை வந்ததும் உரிய நிதி ஒதுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நிவர் புயல் பாதிப்புகளை சீரமைக்க முதற்கட்டமாக ரூ. 74.24 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

* புயலால் சேதமடைந்த வீடுகள், சாலைகள், மின்கம்பங்களை சீரமைக்க நிதி.

* சேதடைந்த பாலங்கள், சாலைகளை சீரமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு