தனியார் மயமாக்கும் மின்வாரிய உத்தரவு வாபஸ்: மின்துறை அமைச்சர் தங்கமணி பேட்டி

 


மாநிலம் முழுவதும் மின்வாரிய அலுவலகங்கள் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்துவதாகவும் அவர்கள் அறிவித்திருந்தனர். 

அதன்படி சென்னை, அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டமானது நேற்று நடந்தது. 

உடனடியாக சம்மந்தப்பட்ட உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தினர். 

இதையடுத்து மின்வாரிய ஊழியர்களின் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்வதற்காக, மின்துறை அமைச்சர் தங்கமணி மின்வாரிய தலைமையகத்திற்கு வந்தார். 

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஊழியர்கள் திடீரென அவரை முற்றுகையிட்டு, சம்மந்தப்பட்ட உத்தரவை திரும்ப பெற வேண்டும் என கோஷம் எழுப்பினர். 

போலீசார் அமைச்சரை பத்திரமாக மீட்டு அழைத்துச்சென்றனர். மேலும் மின் ஊழியர்களின் இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் காட்டு தீயாக பரவியது.

மின்வாரியத்தை தனியார் மயமாக்குவதற்கு ஒரு முன்னோட்டமாக நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று தவறாக புரிந்து கொண்டுவிட்டார்கள்.

ஆகவே அந்த ஆணையை நாங்கள் திரும்பப் பெற்றுக் கொள்கிறோம். பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றாலும் கூட ஆணையை திரும்பப் பெற்றுக் கொள்கிறோம். 

கேங்மேன் தேர்வு முடிந்த பிறகு உயர் நீதிமன்றத்திற்கு சென்று தடையாணை வாங்கியுள்ளார்கள். தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் 

நாளைய தினமே வழக்கை வாபஸ் வாங்குகிறார்கள் என்று சொன்னால் 10 ஆயிரம் பேருக்கு இந்த வாரத்திலேயே பணி கொடுக்கப்படும்.

பணி கொடுக்காததற்கு அரசு காரணம் அல்ல. தொழிற்சங்கங்கள் தான் காரணம். உதவி பொறியாளர் பணியிடத்திற்கு 600 பேரை தேர்வு செய்யவுள்ளோம். 

ஐடிஐ படித்தவர்களை பீல்ட் அசிஸ்டண்ட் ஆகா 2,900 பேரையும் தேர்வு செய்யவுள்ளோம். 

அதற்கான பணி தொடங்கியுள்ளது. மின்வாரியம் மட்டும் அல்ல எந்த பொதுத்துறை நிறுவனங்களும் தனியார் மயமாகாது.இவ்வாறு அவர் கூறினார்.