உத்தரபிரதேசத்தில் பதவி உயர்வுக்கு கிடைத்ததற்கு ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில் கலந்துகொண்ட நண்பர் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ அதிகாரி தலைமறைவு.
உத்தரபிரதேசம் கான்பூரில் பதவி உயர்வு கிடைத்ததற்கு ராணுவ அதிகாரி ஒருவர் விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த விருந்தில் கலந்து கொள்ள தனது லக்னோ நண்பர் ஒருவருக்கும் அவரது மனைவிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதை தொடர்ந்து , அவர்களும் கலந்துகொண்டனர்.
இதையடுத்து, கர்னலின் நண்பர் இராணுவ அதிகாரி மீது கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
அந்த புகாரில், தங்களை விருந்துக்கு அழைத்த, ராணுவ அதிகாரி தனது மனைவிக்கு போதை பானம் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டி உள்ளார்.
இதுதொடர்பாக காவல்துறை இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
இந்தநிலையில், குற்றச்சாட்டப்பட்ட ராணுவ அதிகாரியை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது என ராஜ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
தேடப்படும் ராணுவ அதிகாரி நீரஜ் கெஹ்லோட் என அடையாளம் காணப்பட்ட பின்னர் தலைமறைவாகி விட்டார் என்று கூறப்படுகிறது. போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர் எனவும் தகவல்தெரிவிக்கப்படுகிறது.