தங்க முடியாத துயரம்" சோகத்தில் மலையாள திரையுலகம்

 தமிழில் 'நேரம்' உள்பட ஒரு சில திரைப் படங்களிலும், மலையாளத்தில் 'பிரேமம்' உள்பட பல திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகர் நிவின் பாலி. இவருக்கு பல வருடங்களாக மேக்கப் மேனாக பணியாற்றி வருபவர் ஷாபு புல்பள்ளி. 

இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருப்பது சினிமா வட்டாரத்துக்கே தெரியும்.


மேக்கப்மேன் ஷாபு புல்பள்ளி கிறிஸ்மஸ் வருவதை அடுத்து தனது வீட்டு அருகில் இருந்த மரத்தில் கிறிஸ்மஸ் ஸ்டாரை கட்டுவதற்காக ஏறினார். 


அப்போது அவர் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில் அவர் பலத்த காயம் அடைந்ததாகவும் ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை அவருடைய உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் தெரிகிறது.


மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். 37 வயதான ஷாபு புல்பள்ளி எதிர்பாராத விதத்தில் மரணமடைந்தது அவருடைய குடும்பத்தினர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


ஷாபு புல்பள்ளி மரணம் குறித்த செய்தி அறிந்ததும் நடிகர் நிவின் பாலி தனது இரங்கலை தெரிவித்து அவரது குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.