ஜனவரியில் கட்சி தொடங்கப்படும், கொடுத்த வாக்கை தவறமாட்டேன்-நடிகர் ரஜினிகாந்த் பேட்டிதமிழக மக்களுக்காக எனது உயிரே போனாலும் சந்தோசம் தான் என நடிகர் ரஜினிகாந்த் பேட்டி அளித்துள்ளார். 

கொரோனாவால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய முடியவில்லை. 

ஜனவரியில் கட்சி தொடங்கப்படும், கொடுத்த வாக்கை தவறமாட்டேன் என கூறினார். 

தேர்தலில் வெற்றி பெற்றால் அது மக்களுடைய வெற்றி, தோல்வி அடைந்தாலும் அது மக்களுடைய தோல்வி தான் எனவும் தெரிவித்துள்ளார். 

மாத்துவோம் எல்லாதையும் மாத்துவோம், இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல எனவும் கூறினார். 

தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என தெரிவித்தார். 

மருத்துவ ரீதியாக ஆபத்து என்று மருத்துவர்கள் கூறியிருந்ததால் சுற்றுப்பயணம் செய்ய முடியவில்லை என கூறினார். 

அரசியல் வருகை தாமதமானதற்கு கொரோனா பரவலே காரணம் என கூறினார். அரசியல் கட்சி தொடங்குவது காலத்தின் கட்டாயம் என கூறினார். 


பாஜக-வில் அறிவுசார் பிரிவு மாநிலத் தலைவர் அர்ஜூன்மூர்த்திக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி:

கட்சியின் மேறபார்வையாளராக தமிழருவி மணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

 ரஜினியின் கனவை மக்கள் நிறைவேற்றுவார்கள் என்று தமிழருவி மணியன் பேட்டியளித்துள்ளார். 

ரஜினியால் மட்டும் தான் நல்லாட்சி தர முடியும் என நம்புபவர்களுக்கு நல்லநாள் என்று அவர் தெரிவித்துள்ளார்.