செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமானஇடங்களில் வருமானவரித்துறை சோதனை

 நாடு முழுவதும் செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமான 50 இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட 50 இடங்களில் இந்த வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

செட்டிநாடு குழுமமானது சிமெண்ட், போக்குவரத்து, மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறது. இந்த நிறுவனங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

வரி ஏய்ப்பு புகாரை தொடர்ந்து இந்த சோதனை நடைபெறுவதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை, கரூர், காஞ்சிபுரம், ஐதராபாத், மும்பை உள்ளிட்ட 50 இடங்களில் 200க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று காலை 8 மணி முதல் இந்த வருமான வரி சோதனை நடத்தபட்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னரும் செட்டிநாடு குழும நிறுவனங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு ரொக்கப் பணம், நகைகள் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன