பொங்கல் பரிசு பெற டிச.26 முதல் டோக்கன் விநியோகம்

 

பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பை பெற டிசம்பர் 26-ஆம் தேதி முதல் டிசம்பர் 30 வரை டோக்கன் விநியோகம்.  தமிழகத்தில் அனைத்து ஆட்சியர்களுக்கும், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கு தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பை பெற டிசம்பர் 26-ஆம் தேதி முதல் டிசம்பர் 30 வரை டோக்கன் விநியோகம் செய்யப்பட வேண்டும் என்றும் முற்பகல் 100 பேர், பிற்பகலில் 100 பேருக்கு வழங்கும் வகையில் டோக்கன் வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

எக்காரணத்தை கொண்டு ரொக்க பணத்தை உறையில் வைத்து வழங்கக்கூடாது. பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பை ஜனவரி 13- ஆம் தேதிக்குள் வழங்கி முடிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

குறிப்பிட்ட நாளில் வாங்க முடியாத குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜனவரி 13க்குள் வழங்கவேண்டும். ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பும், பரிசு தொகையும் ஒரே நேரத்தில் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.