சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக லம்போர்கினி கார்


சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக இத்தாலியன் காவல்துறையும் ல்போர்கினி காரை  (Indian rupees ₹ 3.63 Crore Last Recorded Price ) பயன்படுத்தியுள்ளது. 


விலையுயர்ந்த மற்றும் சவாரி செய்வதற்கு பலராலும் விரும்பப்படக்கூடிய கார்களில் ஒன்று தான் லம்போர்கினி.


இது மற்ற கார்களை விட அதிக வேகத்தை கொண்டது. இந்த காரின் வேகத்தால் இத்தாலியில் இன்று (09.11.2020) லம்போர்கினி ஹுராக்கன் எல்பி 610-4 எனும் கார் ( Indian rupees ₹ 3.63 Crore Last Recorded Price ) சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக இத்தாலியன் காவல்துறையால் பயன்படுத்தப்பட்டுள்ளது.


5 மணி நேரத்திற்கும் அதிகமான தூரம் கொண்ட அறுவை சிகிச்சை நடைபெறும் இடத்திற்கு 2 மணி நேரங்களில் செல்வதற்காக இந்த கார் பயன்படுத்தப்பட்டுள்ளது.


வடக்கு படோவிலிருந்து தெற்கு ரோமில் உள்ள ஜெமெல்லி எனும் மருத்துவமனைக்கு சிறுநீரகம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.


இந்த காரில் கேமராக்கள் மற்றும் உறுப்புகளை கொண்டு செல்லும் வகையில் குளிர் சாதனா பேட்டியும் அமைக்கப்பட்டிருக்கும்.


இத்தாலியின் பல்வேறு இடங்களிலும் இந்த கார் உறுப்பு மற்றும் இரத்தங்களை பிற இடங்களுக்கு கொண்டு செல்ல உதவுகிறதாம்.