நிவார் புயல்


 


நவம்பர் 25-ஆம் தேதி மகாபலிபுரம் இடையே நிவார் புயல் கரையை கடக்கிறது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


அதன் படி, தமிழகத்தில் ‘நிவர் புயல்’ கரையை கடக்கும்போது 4133 இடங்கள் பாதுகாப்பற்ற அவை தாழ்வான பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு மக்களை வெளியேற்ற மாவட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், அரசின் வழிகாட்டுதல் மக்கள் பின்பற்றுவது மிகவும் அவசியம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.


நிவர் புயல்:


வடகிழக்குப் பருவமழை காலத்தின் முதல் புயல் வருகிற 25ஆம் தேதி காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது இதனால், பல மாவட்டங்களில் கனமழைககு வாய்ப்பு இருக்கிறது.


அந்த வகையில், மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசும் என்பதால் மீனவர்கள் அடுத்த 5 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.