உள்துறை அமைச்சர் அமித் ஷா  இன்று தமிழகம் வருகிறார்

  


மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று 2 நாள் பயணமாக  தமிழகம் வருகிறார்.


டெல்லியில் இருந்து  தனி விமானத்தில் புறப்படும் அவர்,சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தை வந்தடைகிறார்.இதனால்  அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தமிழக பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


பின்பு ,இன்று மாலை கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகச்சியில், திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்கண்டிகையில் ரூ.380 கோடியில் புதிய நீர்த்தேக்க திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.


சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணி  ரூ.61,843 கோடி மதிப்பீட்டில்  தொடங்கி வைக்கிறார்.மேலும் பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெறுகிறது.


இந்த விழாவுக்கு முதலமைச்சர் பழனிசாமி தலைமை வகிக்கிறார் . துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்புரை ஆற்றுகிறார்.


இதனைத்தொடர்ந்து அமித்ஷாவும் உரையாற்றவுள்ளார்.இந்த நிகழ்ச்சி நிறைவு பெற்ற பின் அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்களுடன் மேற்கொள்ள உள்ளார்.


எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என ஆலோசிக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இறுதியாக நாளை காலை  தனி விமானத்தில் அமித்ஷா டெல்லி புறப்பட்டு செல்கிறார்.பீகார் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அமித் ஷா தமிழகம் வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.


மேலும், தமிழகத்தில் தற்போது பாஜகவினர் வேல் யாத்திரை நடத்தி வரும் நிலையில் தற்போது அமித்ஷா வருகை தர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.