சபரிமலை கோவில் ஊழியர்கள் - கொரோனா உறுதி


சபரிமலையில், பக்தர்கள், கோயில் ஊழியர்கள், காவல் துறையினர் உட்பட 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில், சபரிமலையில், பக்தர்கள், கோயில் ஊழியர்கள், காவல் துறையினர் உட்பட 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதுகுறித்து, தேவசம் வாரியம் கூறுகையில், கோயில் ஊழியர்கள் உட்பட 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


இதனையடுத்து, சபரிமலையில், சோதனை நடைமுறைகள் மேலும் கடுமையாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.