சண்டே ஸ்பெஷல் சுவையான ஆட்டீரல் வறுவல் செய்யுங்க …!!சுவையுங்க
ஆட்டீரல் வறுவல் தேவையான பொருட்கள் :
ஈரல் -அரை கிலோ
பெரிய வெங்காயம்- 2
இஞ்சி விழுது- ஒரு tso
பூண்டு விழுது- ஒரு tsp
மிளகாய் தூள் -2 tsp
தனியாத் தூள்- ஒரு tsp
மிளகுத் தூள் -அரை tsp
மஞ்சள் தூள் -அரை tsp
கடுகு- ஒரு tsp
பட்டை- 2
கறிவேப்பிலை- ஒரு கொத்து
எண்ணெய் -தேவைக்கேற்ப
உப்பு -தேவைக்கேற்ப
செய்முறை :
ஈரலை நன்கு கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, பட்டை இரண்டு துண்டுகள் போட்டு பொரியவிடவும். பிறகு வெங்காயம், கறிவேப்பிலையை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
பிறகு இஞ்சி பூண்டு விழுதை போட்டு நன்கு வதக்கவும். பின்பு ஈரலை போட்டு தொடர்ந்து உப்புத்தூள் மற்றும் எல்லாத்தூள் வகைகளையும் போட்டு நன்கு கிளறி விடவும்.
தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மூடி போட்டு வேகவிட வேண்டும்.
தண்ணீர் முழுவதும் வற்றும் வரை வேகவைத்து நன்கு சுருள கிளறி விட்டு இறக்கி வைக்கவும்.
சுவையான ஆட்டீரல் வறுவல் ரெடி.
வணக்கம் அன்புடன் கார்த்திகா