இப்படித்தான் தண்ணீர் குடிக்கணும்

 



தண்ணீர் எவ்வாறு குடிக்க வேண்டும்?


நமது உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு தண்ணீர் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. நமது உடலில் நீர்சத்து குறையும் போது, பல விதமான நோய்கள் ஏற்படக் கூடும். அனால், நாம் எவ்வளவு தண்ணீர் குடித்தாலும், அந்த தண்ணீரை குடிப்பதற்கென்று ஒரு முறை உள்ளது.


மழைக் காலத்தில் குறைவாகவும், வெயில் காலத்தில் அதிகமாகவும் தண்ணீர் குடிப்பதே தப்பு என்கிறார்கள் டாக்டர்கள்.


அதாவதுதினமும் சரியான அளவுக்குத் தண்ணீர் குடிப்பதால் உடலில் இருக்கும் நுண்ணுயிரி களும், கிருமிகளும் சிறுநீர் வழியாக வெளியேறி விடும். இதேபோல் காய்ச்சல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு வரும் நேரங்களில் அதிகமாகத் தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள கிருமிகள் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும்.


நம்மில் பலர் வெளியில் வேலையாக சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பின் போது, அவசரத்தில் தண்ணீரை நின்றுக் கொண்டே அவசர அவசரமாக தண்ணீர் குடிப்பதுண்டு. ஆனால், அவ்வாறு குடிப்பது நல்லதல்ல. அவ்வாறு தண்ணீர் குடிக்கும் போது, நமது உடலுக்கு கிடைக்கவேண்டிய அணைத்து ஊட்டசத்துக்களும் கிடைக்காமல் போய்விடுகிறது.


நாம் தண்ணீரை அமர்ந்தவாறு, மெதுவாக அருந்துவது தான் நல்லது. அதற்க்கு மாறாக நின்றுகொண்டே தண்ணீர் குடிக்கும் போது, சிறுநீரகம், இரைப்பை, குடல்பாதை போன்றவை பாதிக்கப்பட்டு, பல விதமான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.


எனவே, இனிமேல் நின்றுகொண்டோ அல்லது நடந்து கொண்டோ தண்ணீர் அருந்துவதை தவிர்த்து, நிதானமாக அமர்ந்தவாறு தண்ணீர் அருந்த கற்றுக் கொள்ளுங்கள்.


அதிக அளவு தண்ணீர் குடித்தால் என்ன  ஆகும்?


காலை, மாலை, இரவு உறங்குவதற்கு முன் என சிலர் ஒரே நேரத்தில் அதிக தண்ணீரைக் குடிப்பார்கள். குடிக்கும் நீரானது ரத்தத்தில் கலந்து, உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் சென்று, இறுதியாக சிறுநீரகத்தால் வெளியேற்றப்படும்.


இப்படி ஒரே நேரத்தில் அதிக அளவு நீரைக் குடிப்பதால், உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் அதிக அழுத்தம் கொடுக்கப்படும்.சிறுநீரகத்தில் சேகரமாகும் தேவையற்ற கிருமிகளையும், பொருட்களையும் சுத்திகரிக்கும் பணியைச் செய்ய லட்சக்கணக்கான நெஃப்ரான்கள் உள்ளன.


தொடர்ந்து பல ஆண்டுகளாக அதிக தண்ணீரைக் குடிக்கும்போது சிறுநீரகத்துக்கும், நெஃப்ரான்களுக்கும் அதிக வேலைப்பளு கொடுக்கப்படும். இதனால் நெஃப்ரான்கள் செயலிழந்து, சிறுநீரக மும் பாதிக்கப்படுகிறது.


பேருந்து, வாகனப் பயணங்களில் சிலர் அதிகமாக தண்ணீர் குடிப்பார்கள். ஆனால், சிறுநீர் வெளியேற்ற முடியாமல் இருப்பார்கள்.


இப்படித் தொடர்ந்து பல மணி நேரம் சிறுநீரை அடக்கும்போது, உடலில் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய தேவையற்ற கழிவுப் பொருட்கள் பல மணி நேரம் சிறுநீர்ப் பையிலேயே தங்கியிருக்கும்.


இதனால் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், சிறுநீரோடு ரத்தம் வெளியேறுவது போன்ற யூரினரி இன்ஃபெக்‌ஷன் பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது.


குறைந்த அளவு தண்ணீர் குடித்தால் என்ன?


ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை 200 மில்லி லிட்டர் தண்ணீர் குடிக்க வில்லையெனில், உடல் சோர்வு ஏற்படும்.


ஆண்கள் ஒரு நாளில் 3.5 – 4 லிட்டர், பெண்கள் 2.5 – 3 லிட்டர் தண்ணீருக்கும் குறையாமல் குடிக்க வேண்டும்.


நீராகத்தான் குடிக்க வேண் டும் என்பதில்லை, மோர், இளநீர், பழரசம் போன்ற வகையிலும் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்யலாம். குளிர்காலத்தில் இந்த அளவு கொஞ்சம் குறையலாம்.


சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள், பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட குறைந்தளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.


குளிர் காலத்தில் தாகம் எடுக்கவில்லை என்றாலும், சூடான காபி, டீ பானங்கள் மூலம் உடலின் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும்.


தண்ணீர் குடித்தால் அடிக்கடி சிறுநீர் வரும் என்று நினைத்து தாகத்தை அடக்கினால், உடலின் நீர்ச்சத்து குறைவது தொடங்கி, சிறுநீரகப் பிரச்னைகள் வரை ஏற்படும்.


ஆனாலும் நம்ம ஊர் தட்பவெப்பத்துக்கு நிறைய தண்ணீர் குடித்தாக வேண்டும். ஒவ்வொருவரின் உடல் அமைப்புக்கு ஏற்பக் குடிக்க வேண்டிய தண்ணீரின் அளவும் மாறுபடும். 


வேலை மும்முரத்தில் தண்ணீர் குடிப்பதற்கு மறந்துவிடுபவர்களும் இருக்கிறார்கள். 


எக்ஸ்ட்ரா தகவல்


போதுமான அளவு தண்ணீர் பருகுவதால் சருமம் பொலிவாக இருக்கும்.  சரியான முறையில் தண்ணீர் பருகிவந்தால், சில நாட்களிலேயே உடல் ஆரோக்கியம் பெறுவதை உணரலாம்.




இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் உடல் நலம் பயணம் தொடரும்.


வணக்கம் அன்புடன்  மோகனா செல்வராஜ்