தங்ககடத்தல் தகராறு-ஜாமீனில் ஸ்வப்னா-பிடிவரண்ட் பிறப்பிப்பு

 கேரள தங்க கடத்தல் விவகாரம் ஸ்வப்னா சுரேஷ் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு சுங்கத்துறை நடவடிக்கை


கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் சர்வதேச விமானநிலையத்தில் கடந்த ஜூலை 5ல் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் ரூ.15 கோடி மதிப்புடைய தங்கத்தை கடத்தி வந்ததை  கையும் களவுமாக சுங்கத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.


சுங்கத்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்கில் மூளையாக செயல்பட்ட ஸ்வப்னாவுக்கு ஜாமீன் கிடைத்தது. இருப்பினும், தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்குகளில் ஜாமீன் வழங்கப்படவில்லை.


இந்நிலையில் ஸ்வப்னா சுரேஷ் மீது அன்னிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு சட்டத்தின்கீழ் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக ஸ்வப்னாவை கைது செய்ய சுங்கத்துறை பிடிவாரண்டு பிறப்பித்து உள்ளது.


ஒருவர் மீது அன்னிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்படுமாயின் விசாரணை இன்றி ஒரு ஆண்டு வரை தடுப்புக் காவலில் சம்பந்தப்பட்டவரை வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.