கல்யாண பெண்ணை காரில் கடத்திய மர்ம கும்பல்


மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர் அருகே ஊர்சேரி எனும் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவரின் மகள்தான் சங்கீதா. தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீஷியன் வேலை செய்து வரும் இவர் நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு தன் சகோதரனுடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார்.


அப்போது திடீரென காரில் வந்த மர்ம நபர்கள் சங்கீதாவின் சகோதரரை அடித்துவிட்டு சங்கீதாவை தூக்கி சென்றுள்ளனர். இதுகுறித்து சங்கீதாவின் சகோதரர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.


மேலும் கடத்தல் கும்பல் யார் என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். முப்பதாம் தேதி சங்கீதாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் திருமணம் நடைபெற இருந்துள்ளது. இந்நிலையில் சங்கீதாவை மர்ம நபர்கள் கடத்தி உள்ளது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது