இன்று முதல் தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் இயக்கம்


தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறது.


தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பேருந்து போக்குவரத்துக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமுடக்க தளர்வுகளில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் தமிழகத்திற்குள் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.


 மேலும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் நடைமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.


ஆனால் ஆம்னி பேருந்துகள் ஓடவில்லை.ஆம்னி பேருந்துகள் 174 நாட்களாக ஓடாத நிலையில், சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆம்னி பேருந்துகள் இயங்காமல் இருந்தது.


இதனிடையே தமிழகத்தில் இன்று  முதல் ஆம்னி பேருந்துகள் இயங்கும் எனவும், முதற்கட்டமாக 500 பேருந்துகளை இயக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் வருகையை பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.