ஜெ.,மறைவுக்கு பின் சதி.-ராம்மோகன் குண்டு

 தலைமைச் செயலகத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தியதில் சதி இருப்பதாக ஓய்வுபெற்ற தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 221வது நினைவு தினத்தை முன்னிட்டு மன்னர் கட்டபொம்மன் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மாரியாதை செலுத்தினார்.


இதற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ராம்மோகன் ராவ் தலைமைச் செயலகத்தில் வருமான வரித்துறையினர் சோத்னை நடத்திய சம்பவம் தவறான நடவடிக்கை யார் செய்தார்கள் என்று எனக்கு தெரியாது. தேவையில்லாமல் என் மீது ஒரு பெரிய பழியை ஏற்படுத்திவிட்டனர்.


யார் செய்தாலும் எனக்கு கவலையில்லை.நான் சுத்தமானவன்.முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் இறப்பிற்கு பின் ஏதோ ஒன்று நடத்திருக்கிறது. என்ன நடந்தது யார் என்ன நினைத்தார்கள் என்று தெரியவில்லை.


ஆனால் நான் யாரையும் பழி சுத்த விரும்பவில்லை ஆனால் ஒரு சதி நடத்திருக்கிறது.அதை இப்போ கூற முடியாது.நேரம் வரும்போது நான் கூறுவேன் என்று கூறினார்.