செய்திகள்


புதுச்சேரியில் 50 சதவீத பார்வையாளர்களுடன் அக்டோபர் 15 முதல் திரையரங்குகளை திறக்க புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. மதுபான கடைகள், பார், மதுபானக் கூடங்கள் கலால் விதிமுறைப்படி இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


 இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலனின் உடல் திருச்சியில் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.


கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ராமகோபாலன் நேற்று மறைந்தார். ராமகோபாலனுக்கு கடந்த 28ம் தேதி கொரோனா உறுதியானது


----------------------------------


சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 10வது நாளாக மாற்றமின்றி 84.14 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. டீசல் விலையிலும் மாற்றம் செய்யாமல் 76.10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிலவரம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.