வயநாட்டில் ராகுல்


 


காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 3 நாள் பயணமாக சொந்த தொகுதியான வயநாடு சென்றடைந்தார்.


சிறப்பு விமானம் மூலமாக ராகுல் வயநாடு சென்றார். கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.


மேலும் ஆட்சியர், மற்றும் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார். மேலும் 2019ம் ஆண்டு கவலபரா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் உடைமை, உறவினர்கள் என அனைத்தையும் இழந்து வாடிய 2 சிறுமிகளுக்கு புதியதாக வீடுகளை கட்டித்தந்துள்ள ராகுல் காந்தி அச்சிறுமிகளிடம் வீட்டின் சாவியை ஒப்படைத்தார்.


இதன் பின் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களிடம் கலந்துரையாட உள்ளார்.