செவ்வாய்க்கிழமையில் இதை தவறியும் செய்யக்கூடாது


 


முதலில் செவ்வாய்க்கிழமையில் எதை செய்யக்கூடாது என்று தெரியுமா? பொதுவாகவே செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டுவது மற்றும் ஷேவிங் செய்வது கூடவே கூடாது என்று ஜோதிட சாஸ்திரம் எடுத்துரைக்கிறது.

 

எதற்காக இதை சொல்லி வைத்தார்கள் என்று தெரியாமலேயே பலரும் அதை பின்பற்றி வருகிறார்கள். அதற்கு அறிவியல் ரீதியான காரணங்கள் கூறப்பட்டாலும் ஜோதிடத்தில் அதன் உண்மை காரணம் என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கின்றோம்.

 


செவ்வாய் கிழமையில் முடிதிருத்தம் செய்வதும், சேவிங் செய்வதும் ஆயுளை குறைப்பதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர். செவ்வாய்க் கிழமையில் இந்த தவறை செய்பவர்களுக்கு தன் ஆயுளில் 8 மாதங்கள் குறைந்து  விடுவதாக ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறதாம்.

 

இதற்கு என்ன காரணமாக இருக்கலாம்? என்பதை பார்க்கும் பொழுது சில விஷயங்கள் புலப்படுகிறது. 

 

செவ்வாய்க் கிழமையில் செவ்வாய் பகவான் ஆதிக்கம் செலுத்துவதாக ஜோதிடம் குறிப்பிடுகிறது. நம்முடைய உடலின் உதிரத்தில் செவ்வாய் பகவான் குடி இருப்பதால் ரத்தம் சார்ந்த நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக ஐதீகம் உள்ளது.

 

இப்படியாக பார்த்தால் உதிரத்தில் இருந்து தான் முடிகள் வளர்ச்சி அடைகின்றன.

 

எனவே அன்றைய நாளில் முடி திருத்தம் செய்வதும், ஷேவிங் செய்து கொள்வதும் செவ்வாய் கிரகத்தின் எதிர்மறை விளைவுகளை உருவாக்கக் கூடும் என்பதால் இந்த செயல்களை செவ்வாய்க் கிழமையில் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கலாம்.

 

அது போலவே சனி பகவானுக்கு உரிய நிறமாக கருப்பு இருந்து வருகிறது. செவ்வாய் பகவான் தரும் இன்னல்களிலிருந்து நம்மைக் பாதுகாப்பவர் சனிபகவான் தான். முடியின் நிறமும் கருப்பாக இருப்பதால் செவ்வாய்க்கிழமை அன்று முடியை வெட்டினால் செவ்வாய் பகவான் தரும் எதிர்மறை விளைவுகளிலிருந்து பாதுகாக்கக் கூடிய சனி பகவானின் ஆதிக்கம் குறைந்து விடும் என்பதால் இந்தக் கிழமையில் முடி வெட்டுவதைத் தவிர்க்க கூறியிருப்பார்கள்.

 

இவைகள் மட்டுமல்ல செவ்வாய்க்கிழமையில் அதிக அளவு செலவு செய்வதை தவிர்த்துக் கொள்வது தான் நல்லது என்று கூறப்பட்டுள்ளது.

 

செவ்வாய் கிழமையில் செய்யப்படும் செலவானது சுப விரயமாக இல்லாமல் வீண் விரயமாக மாறக்கூடும் என்பதால் செவ்வாய் கிழமையில் கூடுமானவரை பணத்தை பத்திரப்படுத்திக் கொள்வது தான் நல்லது.

 

தவிர்க்க முடியாத சூழ்நிலையை தவிர மற்ற காரணங்களுக்காக பணத்தை செவ்வாய்க்கிழமை அன்று வெளியில் எடுக்கவே கூடாது. 

 

செவ்வாய்க் கிழமையில் பணம் வரவாக இருக்க வேண்டுமே தவிர, செலவாக இருந்து விடக்கூடாது. இந்த நாளில் கடன் கொடுப்பதை தவிர்ப்பதால் நிறைய பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

 

இயற்கையிலேயே செவ்வாய் விசுவாசம் நிறைந்த பணியாளாக இருந்தாலும் மூர்க்க குணம் நிறைந்தவர். எதைப் பற்றியும் கவலைப்படாமல் எதையும் யோசிக்காமல் வேகமாக செயல்படக்கூடியவர்.

 

அன்றைய தினம் நாம் செய்யும் செயல்கள் தொடரும் என்பதால்தான் கடன் வாங்கியவர்கள் கடனைத் திருப்பித் தரும் போது செவ்வாய்க்கிழமை தந்தால் வெகு சீக்கிரமே கடன் அடையும்.. மீண்டும் கடன் வாங்கும் சூழ்நிலையும் ஏற்படாது என்று கூறுவதுண்டு. 

 

எனவே எந்தக் காரணம் கொண்டும் செவ்வாய்க் கிழமையில் கடன் கொடுக்காதீர்கள். 

 

இவைகளுக்கு பின்னால் இருக்கும் சரியான காரணங்கள் ஜோதிட ரீதியாக இல்லாவிட்டாலும் நம் முன்னோர்கள் சொல்லிய ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னாலும் நிச்சயம் அறிவியலும், ஆன்மீகமும் ஒளிந்து கொண்டிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 

நம்மவர்களில் பலரும் இதை செய்யாதே என்று கூறினால் அதை தான் செய்வார்கள்.

 

அதனால் தான் பல விஷயங்கள் மறைமுகமாகவே முன்னோர்கள் மக்களுக்கு கூறியுள்ளனர்.

 

செவ்வாய்க்கிழமையன்று மெளனவிரதம் அனுஷ்டித்தால் யாகம் செய்தபலனை ஒருவர் அடையலாம் என்கிறது. அதாவது செவ்வாய்க்கிழமையன்று எந்த ஒரு தர்க்கத்திலும் ஈடுபடக்கூடாது.

 

அப்படி விவாதம் செய்தால் அது நிச்சயம் தீமையில் சென்று முடியும். அதனால் தான் செவ்வாயோ வெறும் வாயோ என்று, அன்றைய தினம் வாதம் செய்யாமல் மெளன விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்று சொல்வது

 

செவ்வாய்க்கிழமைகளில் புது ஆடை உடுத்தினால் அதிகம் சேரும். தான தருமங்களை செவ்வாயில் செய்தால் தருமம் செய்வதும் அதிகரிக்கும். செய்யும் செயல்கள் நல்லனவாக இருக்கும்பட்சத்தில் செவ்வாய்க் கிழமைகயைத்  தேர்ந்தெடுங்கள். புண்ணிய பலனை பெறுங்கள்.

 இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் பயணம் தொடரும்.


வாழ்க வளமுடன்


நன்றி அதிதி