பஞ்ச சபைத் ஸ்தலங்களும், பஞ்சாட்சர வடிவமும்- இரத்தின சபை பகுதி 2

திருவாலங்காடு – இரத்தின சபை – சி பகுதி 2


பஞ்ச சபைத் ஸ்தலங்களும், பஞ்சாட்சர வடிவமும்.


1, திருநெல்வேலி – தாமிர சபை – ந
2, திருக்குற்றாலம் – சித்திர சபை – ம
3, திருவாலங்காடு – இரத்தின சபை – சி
4, திருத்தில்லை {சிதம்பரம்} – பொற்சபை – வ
5, மதுரை – வெள்ளிசபை – யஐம்பெரும் அம்பலங்கள் அல்லது ஐம்பெரும் மன்றங்கள் என்பது சிவன் நடனக் கோலத்தில் நடராசராகஎழுந்தருளியுள்ள சிவத்தலங்களுள் முக்கியமான ஐந்து தலங்களாகும்.


நடராஜர் திருநடனம் புரியும் சபைகள் ஐந்து. ரத்தின சபை – திருவாலங்காடு, கனகசபை – சிதம்பரம், ரஜதசபை – (வெள்ளி சபை) – மதுரை, தாமிரசபை – திருநெல்வேலி, சித்திரசபை – திருக்குற்றாலம் ஆகியன. இறைவன் தன் ஆனந்தத் தாண்டவத்தின் மூலம் ஐந்தொழில்களைப் புரிகிறான் என்கின்றன சாஸ்திரங்கள்.


படைத்தல் - காளிகாதாண்டவம், காத்தல் - கவுரிதாண்டவம், அழித்தல் - சங்கார தாண்டவம், மறைத்தல் - திரிபுர தாண்டவம், அருளல் - ஊர்த்துவ தாண்டவம் ஆகிய ஐந்தொழில்களையும் ஐந்து நடனத்தின் மூலம் நிகழ்த்துவதாக ஐதிகம்.


இரத்தின அம்பலம் அல்லது இரத்தின சபை என்ற பெயர் கொண்டது திருவாலங்காட்டில்அமைந்துள்ள வடாரண்யேசுவரர் கோவில் ஆகும். இங்கு நடராசர் தனது இடதுகாலை உயரத் தூக்கிய நடனக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்குள்ள நடனக் கோலம் ஊர்த்தவ தாண்டவமாகும்.


ஊர்த்துவ தாண்டவம் அல்லது ஊர்த்தவ தாண்டவம் என்பது சிவபெருமான் ஆடும் தாண்டவங்களில் ஒன்றாகவும். காளி தேவிக்கும் - சிவபெருமானுக்கும் நடந்த நாட்டியப் போட்டியின் போது சிவபெருமான் இறுதியாக தனது வலது காலை தலைக்கு மேல் உயர்த்தி ஆடினார். ஆனால் காளியால் சிவபெருமானைப் போன்று வலது காலை தலைக்கு உயரே தூக்கி ஆட இயலாத காரணத்தினால் நாட்டியப் போட்டியில் தோல்வி அடைகிறார்.


ஊர்த்துவ தாண்டவத்தில் சிவ பெருமானின் இந்த தாண்டவம் ஐம்பெரும் தாண்டவங்கள், சப்த தாண்டவம் போன்ற தாண்டவகைகளுள் அடங்குகிறது.


தலைவலி மருந்தீடு காமாலை சோகை சுரம்' என்று துவங்கும் பழனி திருப்புகழ் பாடலில் "மாகாளி நாண முளம் அவைதனில் நடித்தோனை' என்ற அடிகளில் திருவாலங்காட்டில் சிவபெருமான் ஆடிய போட்டி நடனத்தில் காளியை தோற்கடித்த வரலாற்றை அருணகிரிநாதர் தெரிவிக்கிறார்.


சிவபெருமானின் தாண்டவக் கோலத்தைக் காணவிரும்பத் தவமிருந்த சுனந்த முனிவருக்கு திருவாலங்காடு தலத்தின் பெருமையை எடுத்துக்கூறி அங்கு சென்று தவமியற்றக் கூறினார் சிவபெருமான்.


அதன்படி சுனந்தர் திருவாலங்காடு வந்து கடும் தவமியற்றினார். நெடுங்காலம் செல்லவே அவர் அமர்ந்திருந்த இடத்தைச் சுற்றி புல் வளர்ந்து அதன் உச்சியில் முஞ்சிப் புல்லும் (நாணல்) வளர்ந்து விட்டது! அதனால் அவருக்கு முஞ்சிகேசர் என்ற பெயரும் வந்தது.


அதேநேரம் சிவனின் திருக்கரத்தில் ஆபரணமாக இலங்கிய கார்கோடகன் என்னும் பாம்பு ஈசனின் கையிலேயே நஞ்சைக் கக்கி விட்டது.


அக்குற்றத்திற்காக அந்தப் பாம்பையும் திருவாலங்காடு சென்று தவமியற்றக் கட்டளையிட்டார் ஈசன். காரைக்கால் அம்மையாருக்கு நடராஜ பெருமான் காட்சி தந்த தலம்


திருவாலங்காடு. இத்தலத்தில் இறைவனின் காலடியில் இன்றும் காரைக்கால் அம்மையார் வாழ்கிறார்.


திருவாலங்காட்டில் உள்ள நடராஜ தாண்டவம் ஊர்த்துவ தாண்டவம் என்று சொல்லப்படும். வலக்காலை உடம்புடன் ஒட்டி உச்சங்கால் வரை தூக்கி நின்றாடும் நாட்டியம் இதுவாகும். இத்தலத்து நடராஜர் மற்ற ஊர்த்துவ தாண்டவங்களைப் போல் தனது பாதத்தை செங்குத்தாக உடலை ஒட்டி தூக்கி நின்று ஆடாமல் உடலின் முன்பக்கத்தில் முகத்திற்கு நேராக பாதத்தை தூக்கியிருக்கிறார்.


சிவபெருமான்  காலை உயர்த்தி ஆடிய தாண்டவம் ஊர்த்துவ தாண்டவம் என்று அழைக்கப்படுகிறது.


இத்தாண்டவமாடியமையினால் சிவபெருமான் ஊர்த்தவ தாண்டவ மூர்த்தி என்றும், ஊர்த்தவ தாண்டவர் என்றும் அழைக்கப்படுகிறார்.


மரபுவழி வரலாறு. இங்கு ஆருத்ரா தரிசன வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது.


இரத்தின அம்பலத்திலுள்ள நடராசர் அண்டமுற நிமிர்ந்தாடும் பெருமான். இவர் இரத்தின சபாபதி என்று அழைக்கப்படுகிறார்.


இந்த அரங்கத்தில் ஸ்படிக லிங்கமும் திருமுறைப்பேழையும் உள்ளன. அம்பலத்தைச் சுற்றி வரும்போது சுந்தரர்  பதிகம் பதிக்கப்பட்டுள்ளதைக் காணமுடியும். இவ்வம்பலத்தின் விமானம் செப்புத்தகடு வேயப்பட்டு 5 கலசங்களுடன் அமைந்துள்ளது


முன் காலத்தில் ஆலமரக்காடாக இருந்து அதில் இறைவன் சுயம்புவாக தோன்றி, நடனம் செய்த படியால் இத்தல இறைவன் வடாரண்யேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். 


நடனக்கலைகளில் தேர்ச்சி பெற விரும்புவர்கள் வணங்க வேண்டிய தலம். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமையை பலப்படுத்தும் தலம். 


ண்டாவது சுற்றுப் பிராகாரம். வலதுபுறத்தில் இறைவி வண்டார் குழலம்மை சந்நதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. நேரே இறைவன் கருவறைக்குச் செல்லும் நுழைவு வாயில். இந்த நுழைவு வாயிலின் மேற்புறம் சிவபெருமானின் ஐந்து சபைகளும் அழகிய சுதைச் சிற்பங்களாக காட்சி தருகின்றன.பிராகாரத்தில் வலமாக வரும்போது ஆருத்ரா அபிஷேக மண்டபம், ரத்தினசபை வாயில் உள்ளது. சபைக்கு எதிரில் நிலைக்கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது. அடுத்து தெற்கு நோக்கிய அம்பாள் சந்நதி உள்ளது. அம்பிகை நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சிதருகிறாள். அம்பிகை கருவறையில் கோஷ்ட மூர்த்தங்கள் இல்லை. சந்நதியிலுள்ள சிற்பக் கலையழகு வாய்ந்த கல்தூண்கள் காண அழகுடையவை. ரத்தின சபையில் நடராஜப் பெருமானின் ஊர்த்துவ தாண்டவ உற்சவத் திருமேனி தரிசிக்கத்தக்கது.


சிவகாமி, காரைக்காலம்மையார் திருமேனிகள் அருகிலுள்ளன. ரத்தின சபையில் பெரிய ஸ்படிகலிங்கமும், சிறிய மரகதலிங்கமும் உள்ளன. இவற்றிற்கு நான்கு கால அபிஷேகம் நடைபெறுகிறது. ரத்தின சபையை வலம் வரும்போது சாளரத்தில் சண்டேஸ்வரரின் உருவம் உள்ளது. ரத்தினச் சபையின் விமானம் செப்புத் தகடு வேயப்பட்டு ஐந்து கலசங்களுடன் விளங்குகிறது. திருவாலங்காட்டுச் செப்பேடுகள்: தமிழகத்தின் சரித்திரத்தின் முக்கியமான பகுதியை வெளிப்படுத்திய செப்பேடுகள் திருவாலங்காட்டில் கிடைத்தன.


சென்னை - அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் இந்த சிவ தலம் உள்ளது. திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் செல்லும் பேருந்தில் சென்று திருவாலங்காடு நிறுத்தத்தில் இறங்கினால் கோயில் மிக அருகிலேயே இருக்கிறது.


இந்த தலம் தலைக்கு உரிய தலமாக கூறப்படுகிறது. காரணம் இத்தல இறைவியின் பெயர் வண்டார் குழலி - வண்டுகள் மொய்க்கும் வகையில் வாசமுள்ள கூந்தலையுடைய அன்னை.


ஆகவே இத்தலம் தலைக்குரிய திருமுடி தலமாக கூறப்படுகிறது.


நாளை திருத்தில்லை {சிதம்பரம்} – பொற்சபை    


இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.


ஓம்  சிவாய நம  ஓம் சிவ சிவ ஓம்


திருச்சிற்றம்பலம்.


நன்றி. 


பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்