பயங்கரவாத நடவடிக்கைகளின் மையமாக பெங்களூரு மாறியுள்ளது

 பாராளுமன்ற உறுப்பினர் தேஜாஷ்வி சூர்யா உள்துறை அமைச்சர் அமித் ஷாவை  27.09.2020  சந்தித்தார்.


அப்போது,  பெங்களூரு பயங்கரவாத நடவடிக்கைகளின் மையமாக மாறியுள்ளது. பல பயங்கரவாதிகளை கைது செய்வதன் மூலம்  மற்றும் நகரத்தில் ஸ்லீப்பர் செல்கள் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.


எனவே  தேசிய புலனாய்வு அமைப்பை (என்ஐஏ) நிரந்தரமாக  பெங்களூருவில் அமைக்கவேண்டும்  என உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜியை கேட்டுக்கொண்டார்.


இது விரைவில் அமைக்கப்படும் என்று அமித் ஷா உறுதியளித்தார் என பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா தெரிவித்தார்.