சென்னையில் துணிக்கடை தந்த அடடே ஆபர்.. குவிந்த கூட்டம்


லாக்டவுன் ஓபன் பண்ணதும் இப்படியா? சென்னையில் துணிக்கடை தந்த அடடே ஆபர்.. குவிந்த கூட்டம்.. சீல்


மக்கள் கூட்டம் அலைமோதிய காரணத்தால் அங்கு தற்போது அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தியாகராய நகரில் பல்வேறு துணிக்கடைகள் உள்ளது. அங்குதான் இந்த கடையும் அமைந்துள்ளது. கடை சில வாரங்களுக்கு முன் கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் இந்த கடை திறக்கப்பட்டது.


புதிதாக கடை திறக்கப்பட்ட நிலையில், மக்களை கவரும் வகையில் நிறைய அதிரடி ஆபர்கள் போடப்பட்டது. உதாரணமாக ஒரு பேண்ட் 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஜீன்ஸ் 60 ரூபாய்க்கு விற்கப்பட்டது. டி சர்ட் 8 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பல்வேறு விலைகளில் துணிகள் ஆபரில் விற்கப்பட்டது. அதிலும் 100 ரூபாய்க்கும் குறைவான விலையில் நிறைய துணிகள் விற்கப்பட்டது.


இப்படி அதிரடி சலுகைகள் கொடுத்த காரணத்தால் காலையிலேயே அந்த கடை முன் மக்கள் கூட்டம்  கூடி முண்டி அடிக்க தொடங்கினார்கள்.


சமூக இடைவெளி இன்றி மக்கள் நெருக்கமாக வரிசையில் நிற்க தொடங்கினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


இதையடுத்து போலீசாருக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது . இதையடுத்து அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் அந்த புதிய கடைக்கு சீல் வைத்தனர்.


விதிமுறைகளை மீறியதாவும், மக்கள் கூட்டம் கூட வழி செய்ததாகவும் கூறி கடைக்கு சீல் வைத்தனர். அதோடு போலீசார் அங்கிருந்த கூட்டத்தை கலைத்தனர்.


சென்னையில் துணிக்கடை ஒன்றின் முன் மக்கள் கூட்டம் அலைமோதிய காரணத்தால் அங்கு தற்போது அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.