மழைக்கால கூட்டத்தொடரில் கேள்வி நேரத்திற்கென 30 நிமிடங்கள் ஒதுக்க வேண்டும்
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பங்கேற்க வரும் எம்.பி.க்கள் அனைவரும் 72 மணிநேரத்துக்கு முன், கொரோனா பரிசோதனை செய்திருத்தல் அவசியம் என்றும் எம்.பி.க்கள் மட்டுமல்ல கூட்டத்தொடரில் பங்கேற்கும் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்தபின் தொற்று இல்லாத நிலையில்தான் பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது கேள்வி நேரத்திற்கென 30 நிமிடங்கள் ஒதுக்க வேண்டும் என்று மக்களவை சபாநாயகர், மாநிலங்களவை தலைவருக்கு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கோரிக்கை விடுத்துள்ளார்.